India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 91 ஊராட்சிகளில் தோட்டக்கலைத் துறை மூலம் ஏக்கருக்கு 75% மானியத்தில் காய்கறி விதைகள், இடுபொருட்கள், மா, சப்போட்டா, கொய்யா தொகுப்பும் அடங்கிய பயனாளிகளின் பங்குத் தொகையுடன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காரியாபட்டி தலைமைக் காவலர் சிவபாலன் கைது செய்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 200 சவரன் நகை, ரூ.4 கோடி சொத்து ஆவணங்களை மீட்க உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், காரியாபட்டி தலைமைக் காவலர் சிவபாலனை சென்னைக்கு நேரில் அழைத்து காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் அவரது பணியை வெகுவாக பாராட்டினார்.
வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் இன்று நாயக்கர் கால செப்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது. இதன் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜூலை 5) தனியார் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 50 பள்ளி மாணவர்களுடனான காப்பி வித் கலெக்டர் என்ற 75 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
வைப்பாற்றின் வடகரை பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பண்டைய கால மக்களின் வரலாற்றை அறியும் வகையில் வெம்பக்கோட்டையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 3ம் கட்ட அகழாய்வை ஜூன்.18 இல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வீரநாயக்கர் கால செப்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமில்லாமல் வண்டல், களிமண் எடுக்க tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவகாசியில் 11, இராஜபாளையம் 44, காரியாபட்டி 16, திருச்சுழி 47, விருதுநகர் 13, சாத்தூர் 28, ஸ்ரீவி 46, அருப்புக்கோட்டை 17, வெம்பக்கோட்டை 12 என மொத்தம் 283 இடங்கள் தகுதி வாய்ந்த நீர் நிலைகளாக கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகரில் கால்நடை பராமரிப்புத்துறை ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவன பயிர்கள் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற 20.07.24-க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 63 விபத்தில் 148 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 108 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்த முறையை பின்பற்றுவதால் தான் விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 283 நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வத்திராயிருப்பில் 49, சிவகாசியில் 11, ராஜபாளையம் 44, காரியாபட்டி 16, திருச்சுழி 47, விருதுநகர் 13, சாத்துார் 28, ஸ்ரீவில்லிபுத்துார் 46, அருப்புக்கோட்டை 17, வெம்பக்கோட்டை 12, என 283 நீர் நிலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மண் எடுக்க விருப்பம் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் தாசில்தாரை அணுகலாம்.
விருதுநகர் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது. இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.