India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை 500க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக 3 அகழாய்வு குழிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 2 புதிய அகழாய்வு குழிகள் உருவாக்கப்பட்டு அவற்றில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாக இணை இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர் பாரத்தசாரதி (17). இவரின் தந்தை ஆட்டோ ஓட்டுனர். பார்த்த சாரதி JEE மெயின் நுழைவு தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது அவர், சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க உள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் பட்டாசு ஆலைகளில் விபத்துகளில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 9ம் தேதி செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேரும், 29ம் தேதி சாத்தூர் பந்துவார்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேரும், ஜூலை 9ல் காளையார்குறிச்சி சுப்ரீம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1029 ரேஷன் கடைகளிலும் கடந்த ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்காக ஜூலை மாதம் முழுவதும் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே துவரம் பருப்பு, பாமாயில் பெறாத அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 10) தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 69 முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 15 அரசு துறைகளைச் சேர்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் மாரியப்பன் (65), முத்து முருகன் (53) ஆகிய இரு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இருவரது உடல்களும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பட்டாசு ஆலையில் நிர்வாகம் சார்பில் இருவரது குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். காளையார்குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 28 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் உதவித்தொகைகளையும், 1 பயனாளிக்கு ரூபாய் 20,000 விதம் என 29 பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 8) அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளம் மற்றும் கண்மாயிலிருந்து களிமண், வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு கட்டணமின்றி எடுத்துச் செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஜெயசீலன் 10 விவசாய பெருமக்களுக்கு மண் எடுப்பதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால், ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நில எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா ரத்து தொடர்பான மனுக்கள் குறித்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 7) தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.