India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை உள்பட 4369 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் சுமார் 2358 வழக்குகளுக்கு ரூ.14,75,82, 519 தீர்வு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் செப்.15 முதல் செப்.18 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் உள்ள பி.எஸ்.ஆர். கல்லூரியில் முதல் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார். அப்போது:- மாணவர்கள் கல்லூரி படிக்கும்போது தங்களது இலக்கை நிர்ணயம் செய்து அதற்கு ஏற்றவாறு பயணம் செய்ய வேண்டும். எதிர்வரும் சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என நம்பிக்கையூட்டினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (14.09.2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த கண்காணிப்பு பணி மற்றும் அடிப்படை வசதி குறித்தும் ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆவணி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகனை நேரில் சந்தித்து வணிக பிரச்சனைகள் குறித்தும், தற்போது பல பட்டாசு கடைகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்காததையும் எடுத்துக் கூறினார். எனவே பட்டாசு கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஒரே அலுவலகத்தில் மகன் மென்பொருள் பொறியாளர், தந்தை தச்சர், வறுமை மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள தலைமுறை இடைவெளிகளை கல்வி எவ்வாறு இணைக்கிறது என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது” என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தனது X தளத்தில் தந்தை மகன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படத்தை பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று(செப்.9) நடைபெற்றது. இதில் காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களின் மின்னணு குடும்ப அட்டைகளில்பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் 1330 குறட்பாக்களை மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறனுடைய பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அக்-25ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மேய்ச்சல் நிலப்பரப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை மனித உடல் வடிவமைப்பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மூட்டையை பார்த்த காவல்துறையினர் மனித உடலை யாரோ சாக்கில் கட்டி வீசியிருக்கலாம் என சந்தேகப்பட்டு அதனை அவிழ்த்து பார்த்த போது கன்றுகுட்டியின் உடல் சாக்கு முட்டையில் இருப்பது தெரிய வந்தது.
Sorry, no posts matched your criteria.