Virudunagar

News July 14, 2024

விருதுநகர்: 200 பவுன் கொள்ளை – பரபரப்பு

image

விருதுநகர் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள துணை பொது மேலாளர்கள் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரின் வீடுகளில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நேற்று இதே வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 14, 2024

மாவட்ட கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் மேளா

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து 38 கிளைகளிலும் வரும் ஜூலை 18ஆம் தேதி கடன் மேளா மற்றும் டெபாசிட் மேளா நடைபெற உள்ளது. இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

News July 14, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்று சேரும் வகையில் 2ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது. இதில் ஜூலை 16ஆம் தேதி அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டாரங்களில் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 14, 2024

தையல் இயந்திரம் பெற ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் மனைவி அல்லது விதவை அல்லது திருமணமாகாத மகள்கள் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாமல் இருந்தால் ஜூலை 25 க்குள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்படலாம் என தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

விருதுநகரில் தேர்வை புறக்கணித்த 2,227 பேர்

image

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும் குரூப் 1 பதவிக்கான தேர்வில் பங்கேற்பதற்காக மாவட்டத்திலிருந்து 6,898 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வுக்காக 25 மையங்கள் ஒதுக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் 4,671 பேர் பங்கேற்றனர். இதில் 2,227 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 11 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தேர்தலின் போது இடமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து மதுரை சரக டிஐஜி (பொறுப்பு) துரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 14, 2024

மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

கமுதியை சேர்ந்த மூக்கையா என்பவர் காளையார்கரிசல்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான செல்வக்குமார், முருகன் ஆகியோருக்கு கடன் கொடுத்துள்ளார். 2018 இல் கடனை திருப்பிக் கேட்ட போது மூக்கையாவை காரியாபட்டி அருகே உள்ள ஆலங்குளம் கண்மாய் பகுதியில் வைய்த்து செல்வக்குமார், முருகன், சோனைபாண்டி ஆகியோர் எரித்து கொலை செய்தனர். இவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News July 13, 2024

ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

image

விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுநகருக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். 

News July 13, 2024

விண்வெளி துறையில் வேலை வாய்ப்பு

image

விண்வெளி தொழில் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், விருதுநகர் மாவட்டம் (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News July 13, 2024

உயிரிழப்பு 4 ஆக உயர்வு

image

சிவகாசி அருகே காளையார்குறிச்சி சுப்ரீம் பட்டாசு ஆலையில் கடந்த 9 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
மேலும் தீக்காயமடைந்த சரோஜா, சங்கரவேல் ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சரோஜாவும் இன்று காலை சங்கரவேல் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!