India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசியில் 1200 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு ஆலைகளில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று ஆடி 1ஆம் தேதியை முன்னிட்டு அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலான பட்டாசு தொழிலாளர்கள் தங்களது குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை கண்ணாடி மணிகள், சுடுமண் பெண் உருவ பொம்மை, சங்கு வளையல்கள், காளை உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சங்கு வளையல் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகாசியில் இன்று ரயில்வே ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு SRMU மதுரை கோட்ட உதவி செயலாளர் சிவகாசி கிளை பொறுப்பாளர் சீதாராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த இரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்சன் திட்டம் எனும் உத்தரவாதமற்ற மோசடி திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஜூலை 16) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது. அதன்படி, விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 4 நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <
சிவகாசியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாக சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். பின்னர் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு விளக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்த வளாகத்தில் 2 வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்தபோது நடந்ததா? இல்லாவிட்டால் ஆளுநர் ஆர்என் ரவி அங்கு இல்லாதபோது நடந்ததா? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இந்த நிலையில், போலீசார் வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளார்.
வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர் ஜெகதீசன் பலகையில் நூல்களை கட்டி ஆசிரியர்களிடம் வழங்கினார். அந்தப் பலகையை சுவரில் மாட்டிய போது நூலில் உள்ள இடைவெளியில் காமராஜர் உருவம் தத்ரூபமாக தெரிந்தது. மாணவரின் இந்த முயற்சியை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் நாளை (16.07.2024) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் நுகர்வோர்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காண உள்ளார். எனவே பொதுமக்கள் மின் தொடர்பான குறைகள் இருந்தால் மனுக்களாக கொடுத்து தீர்வு பெறலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.