India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்துார், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (52). இவரது பங்காளி சண்முகவேலின் மகன் குருநாதன், 27. இருவருக்கும் இடையே சொத்து விவகாரத்தில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அந்தோணி ராஜை, குருநாதன் வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் குருநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை ஜூலை 19ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(ஜூலை 18) விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிராக, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு வழக்கு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது 2 மணிநேரம் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லையென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நவாஸ்கனி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக கூறி அவரது வெற்றியை எதிர்த்து சற்றுமுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் விருதுநகர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதை ஓவர்சீயர்கள், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் முழுவீச்சில் கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது. விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள் நுழைகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்காணிப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதன்படி ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.