India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகரில் காரிப் பருவத்தில் பிரிமியம் தொகையாக வாழைக்கு ரூ.3404, வெங்காயம் 1 ஏக்கருக்கு ரூ.1744 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழை பயிருக்கு சிவகாசியில் மங்கலம், திருத்தங்கல், நத்தம்பட்டி வெங்காயத்திற்கு காரியாபட்டி, முடுக்கன்குளம், ஸ்ரீவி, மல்லி விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டங்கலை துணை இயக்குனர் சுபா தெரிவித்துள்ளார். காப்பீடு செய்ய வெங்காயத்திற்கு ஆக்.31, வாழைக்கு செ.16 கடைசி நாள்.
விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நர்சரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பல மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள், பணப்பயிர் மரக்கன்றுகளில் உண்மை தன்மை அட்டையை கட்டாயம் பொருத்த வேண்டும். அதில் நர்சரி உரிமையாளரின் கையொப்பத்துடன் மரத்தின் பெயர், ரகத்தின் பெயர் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்- சாத்தூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், புதிய புதிய ஆட்சியர் கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமான பணிகள் 10% முடிந்துள்ளதாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிகமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் இன்று (ஜூலை 20) காஃபி வித் கலெக்டர் 83வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், யூ-டியூப் பிரபலங்கள் கோபி சுதாகர் கலந்துகொண்டு விஷுவல் கம்யூனிகேசன் துறையில் ஆர்வம் கொண்ட 100 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கடந்த மே 28ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சரவெடி பட்டாசுகளை அழித்து குடோனின் சீலை அகற்றிவிடலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி ரக பட்டாசுகளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இன்று (ஜூலை 20) அழித்தனர்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு மூத்த ஆலோசகர், 2 வழக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றின் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணியிடங்களுக்கு முதுநிலை சமூகப்பணி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஜூலை.23 கடைசி நாள் ஆகும்.
தென்மாவட்டங்களில் ரயில்வே ட்ராக்கை ஒட்டியுள்ள தனி வீடுகளில் மங்கி குல்லா, கைகிளவுஸ் அணிந்து இரும்பு உளியை ஆயுதமாக பயன்படுத்தி வீட்டின் உரிமையளர்களை கட்டிப்போட்டு பல வருடங்களாக 68 க்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம் கும்பல் கொள்ளை அடித்தது. இதில் 8 பேரை கடந்த மாதம் விருதுநகர் போலீசார் கைது செய்தனர். இதில் தேடப்பட்டு வந்த ராம்பிரகாஷ் நேற்று ராஜபாளையம் நீதிமன்றத்தில் சடண் அடைந்தார்.
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.