India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க 2011- 12 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2053 கோடி. இத்திட்டத்திற்கு இன்றைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (ஜுலை.23) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி பத்மா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.07.2024) மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பயிலும் 50 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector’ என்ற 84வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான போட்டித் தேர்வு நேற்று மூன்று மையங்களில் நடைபெற்றது. மொத்தம் மூன்று மையங்களில் 1051 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1000 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மேலும் 51 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) கடந்த 16ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க கடந்த 6 மாதங்களாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல் குறித்து 9 குழுக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் இதுவரை 169 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குறைகள் சரி செய்யப்பட்ட 50 பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் உரிமம் வழங்கி உத்தரவிடப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்த காளீஸ்வரி என்பவர் பணியின் போது மரணமடைந்தால் அவரது வாரிசுதாரரான ஞானசுந்தரி என்பவருக்கு சாத்தூர் புனித தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் சமையல் அமைப்பாளராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையினை ஆட்சியர் கருணை அடிப்படையில் வழங்கினர். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய் மற்றும் பருப்பு விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக பாசிப்பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.200 விலை உயர்ந்து ரூ10,250 முதல் ரூ.10,400 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.500 விலை உயர்ந்து ரூ.15,000 முதல் ரூ.15,800 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.6,435 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.