India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் 4000-த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் 300க்கும் மேற்பட்ட பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி சூலக்கரையில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இதில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆக..1- முதல் ஆக.5 வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீவி அருகே தவிர்த்தான் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள நூலகம் அருகில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். விசாரணையில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதேபோல் ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியை சேர்ந்த ரானுவ வீரர் பொன்னுச்சாமி நேற்று இரவு மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்டத்தில் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம், வத்ராப், காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இவை ஜூலை.26 முதல் செயல்பட உள்ளது.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று இரவு தங்கத்தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட கட்சியினர் பலர் இருந்தனர்.
ஸ்ரீவி அருகே அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சேர்ந்தவர் சின்னகுருசாமி. இவர் அதிமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அவரது உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததையடுத்து நேற்றிரவு நூலகம் அருகில் வைத்து சின்னகுருசாமி உடன் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டார். இன்று காலை நூலகம் முன் சின்னகுருசாமி இறந்து கிடந்தார். வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கிருஷ்ணன்கோவில் குளோபல் சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் 70 மாணவ மாணவிகளுடன் காப்பி வித் கலெக்டர் என்ற 85 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவருடன் கலந்துரையாடினார். மேலும் கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க 2011- 12 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2053 கோடி. இத்திட்டத்திற்கு இன்றைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.