Virudunagar

News July 26, 2024

காவல் ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமின்

image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மே.21 அன்று நடந்த கோயில் திருவிழாவில் ராமர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் ராமசாமி, அவரது மகன் ராஜேந்திரன், ராம்குமார், இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் சத்திய ஷீலா தினமும் ஸ்ரீவி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

News July 26, 2024

விருதுநகரில் இன்று 4 புதிய நீதிமன்றங்கள் திறப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்டத்தில் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம், வத்ராப், காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் இன்று திறக்கப்பட உள்ளன.

News July 26, 2024

இ.எஸ்.ஐ குறைதீர் கூட்டம்

image

விருதுநகரில் இ.எஸ்.ஐ.சி யின் கவிதா சமகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் ஜூலை.29 இல் சிவகாசி இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தில் காலை.9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ.சி காப்பீட்டாளர்கள்,பயனாளர்கள்,வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என துணைமண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். SHARE IT

News July 26, 2024

907.33 ஹெக்டர் நிலம் ஒப்படைப்பு – ராமச்சந்திரன்

image

மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்வதில் தமிழக அரசு கால தாமதம் செய்வதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளதாகவும், மதுரை – தூத்துக்குடி அகல ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு 907.33 ஹெக்டர் நில எடுப்பு பணி முடிந்து ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதி மன்றம்

image

சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.2.66 லட்சத்திற்கு வாங்கிய ஜீப்பில் பழைய என்ஜினை மாற்றி விற்பனை செய்ததாக கூறி மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி முத்துகிருஷ்ணனுக்கு ரூ.2.66 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும்.மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவிற்காக ரூ.10000 வழங்க நேற்று உத்தரவிட்டார்.

News July 25, 2024

தொண்டர்களுக்கு அமைச்சர்கள் அழைப்பு

image

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி விருதுநகர் மாரியம்மன் கோயில் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

News July 25, 2024

சிவகாசி இளைஞர் ஆணவக்கொலை அல்ல

image

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்படவில்லை என விருதுநகர் எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். கொலையான கார்த்திக் பாண்டியனும், அவரது காதல் மனைவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து அதே பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் சகோதர்கள் கொலை செய்ததாக விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் கூறியுள்ளார்.

News July 25, 2024

விருதுநகரில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (26). சிவகாசியைச் சேர்ந்த நந்தினி என்ற கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு தனது மனைவியுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக்கை வழிமறித்து மர்ம நபர்கள் கார்த்திக்பாண்டியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 25, 2024

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (ஜூலை 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

விருதுநகரில் ‘காபி வித் கலெக்டர்’

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜூலை 24) சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ‘காபி வித் கலெக்டர்’ என்ற 86வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் உயர் கல்வி குறித்து வழிகாட்டுதல் வழங்கினார்.

error: Content is protected !!