Virudunagar

News July 28, 2024

சிவகாசியில் பட்டாசு வர்த்தக கண்காட்சி

image

தமிழகத்தில் முதன்முறையாக சிவகாசி மாநகரில் பட்டாசு வர்த்தக கண்காட்சி மற்றும் பட்டாசு பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஜா போஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், தமிழக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் பட்டாசு வணிக பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

News July 28, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

விருதுநகரில் 60 ஆண்டுகளாக எட்டப்படாத தீர்வு

image

தமிழகத்தின் மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணை அமைந்துள்ளது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 10,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 1967 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 மீட்டருக்கு அனையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கேரள அரசுடன் தமிழக அரசு பேசி வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சரிசெய்யப்படாததால் இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News July 28, 2024

தமிழகத்தில் 2.23 கோடி பேருக்கு ரேஷன் கார்டு

image

காரியாபட்டி பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மட்டுமே பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கும் திட்டம் இங்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் 2.23 கோடி பேர் ரேஷன் கார்டு பெற்றுள்ளனர்.

News July 27, 2024

செண்பகத்தோப்பில் சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் நிற அணில்கள் அறுங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. செண்பகத் தோப்பில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ஏராளமான அரிய வகை சாம்பல் நிற அணில்கள் உள்ளன. இந்தநிலையில், மக்கள் அதிகம் வரும் செண்பகத்தோப்பில் சாம்பல் நிற அணில்கள் பற்றி முழு அளவில் தெரிந்து கொள்ள அருங்காட்சியம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

News July 27, 2024

அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 27) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

News July 27, 2024

ஆட்சியர் தலைமையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 27) A.A.A இண்டர்நேஷனல் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 40 தனித்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “Coffee With Collector” என்ற 88-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

News July 27, 2024

சாம்பல்நிற அணில்கள் அருங்காட்சியகம்

image

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பகத்தில் செண்பகத்தோப்பில் பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் 1989 முதல் 480 சதுர கிலோ மீட்டரில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. இதில் புலி, சிறுத்தை, கரடி உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் சாம்பல் நிற அணில்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக செண்பகத்தோப்பில் அருங்காட்சியகம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

News July 27, 2024

சதுரகிரி மலை ஏற மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி

image

விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையையொட்டி மலைக்கு செல்ல அக.1 முதல் ஆக.14 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று மதுரை, விருதுநகர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மலை ஏற காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொடுட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட தேதி அறிவிப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கி மாலை 6 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைவதாக அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!