Virudunagar

News July 30, 2024

ஜீரோ உயிரிழப்பு – விருதுநகர் முதலிடம்

image

தமிழ்நாட்டில் முதன்முறையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை விருதுநகர் மாவட்டத்தில் 7991 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 ஆண்டில் 6 கர்ப்பிணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News July 30, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

கடவுளின் ஆணையால் உருவான ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’

image

தமிழ்நாட்டில் பழமையான ஊர்களில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கூறப்படுகிறது. மல்லி என்ற குறவ ராணியின் மகனான வில்லிக்கு பெருமாள் காட்சி தந்து அறிவுறுத்தியதன் பேரில், காட்டை திருத்தி கோயில் கட்டி அழகிய நகரை உருவாகினான் என்பது புராணம். இதனாலேயே ‘வில்லிபுத்தூர்’ என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. உங்கள் விருதுநகர் நண்பர்களுக்கு இது தெரியுமா?

News July 30, 2024

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 வீதம் மொத்தம் ரூ.18,000 மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

News July 29, 2024

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 29, 2024

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற அழைப்பு

image

விருதுநகர் மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்துாரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு www.tncu.tn.gov.in என்ற இணையத்தில் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். பதிவேற்றிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 29, 2024

விருதுநகரில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலும் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 29, 2024

சவாலுக்கு பெயர்பெற்ற விருதுநகர்?

image

விருதுகள் அள்ளிய மல்யுத்த வீரன் சவால் விடுத்துள்ளான். அப்போது ஆண்டித் தேவர் என்பவர் சவாலை ஏற்றுக்கொண்டு, போரிட்டு வென்று அவனது விருதுகளை வெட்டி சாய்த்துள்ளார். இந்த மல்யுத்தம் நடந்த இடம் தற்போதைய தேசபந்து மைதானம். விருதுகளை வெட்டி எரிந்த இடம் என்பதால் ‘விருது வெட்டி’ என பெயரானது. 1875ல் விருதுப்பட்டி என மாறி தற்போது ‘விருதுநகர்’ என்றானதாக தகவல். விருதுநகர் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?

News July 28, 2024

விருதுநகரில் 80 பவுன் நகை கொள்ளை – கைது

image

விருதுநகர் அருகே உள்ள ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பில் துணை மேலாளர் வீட்டில் 80 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று பேரை கைது செய்து நகைகளை மீட்டெடுக்க மத்தியப்பிரதேசத்தில் போலீசார் முகாமிட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

சிவகாசியில் பட்டாசு வர்த்தக கண்காட்சி

image

தமிழகத்தில் முதன்முறையாக சிவகாசி மாநகரில் பட்டாசு வர்த்தக கண்காட்சி மற்றும் பட்டாசு பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஜா போஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், தமிழக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் பட்டாசு வணிக பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

error: Content is protected !!