Virudunagar

News August 1, 2024

சாதனை படைத்த விருதுநகர் மருத்துவர்கள்

image

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓர் ஆண்டில் மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் மருத்துவர்கள் பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வட்டத்தில் கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான ஓராண்டு காலத்தில் 7,991 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு மகப்பேறு இறப்பும் நிகழவில்லை. இதன்மூலம் மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.

News August 1, 2024

சதுரகிரி கோயிலுக்கு 5 நாட்கள் அனுமதி

image

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று(ஆக.,1) முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி. இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 1, 2024

சிவகாசி அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார்(32). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் நேற்று(ஜூலை 31) திருத்தங்கல் உறிஞ்சுகுளம் கண்மாய் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், தாண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

News August 1, 2024

விரைந்து செயல்பட கலெக்டர் அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஜூலை 1) முன்னோடி வங்கி சார்பாக வங்கி அலுவலர்கள், கல்லூரி பொறுப்பு பேராசிரியர்கள் & கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நிலுவையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு கல்வி கடன் வழங்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News August 1, 2024

வாகன போக்குவரத்து வழித்தடம் அறிவிப்பு

image

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் சென்று வர வத்திராயிருப்பு காவல் நிலையம் சார்பில் போக்குவரத்து வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்

image

விருதுநகர், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று(1.8.24) நடைபெற்ற மாணவிகளுக்கு புத்தக உண்டியல் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைவர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் திடீரென்று பள்ளியின் சத்துணவு சமையலறைக்கு சென்று அங்கு சமையல் செய்து வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். உடன் காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் உட்பட பலர் இருந்தனர்.

News July 31, 2024

சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் அனுமதி

image

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆடி அமாவாசை வருவதை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5 வரை, 5 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

பள்ளி மாணவிகளுக்கு உண்டியல் வழங்கிய ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 31) மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தங்களது சேமிப்பில் இருந்து எதிர்வரும் புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உண்டியல் வழங்கினார்.

News July 31, 2024

ஸ்ரீவி ஆண்டாள் கோயில் 2ஆம் நாள் திருவிழா கோலாகலம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 31) பதினாறு சக்கர சப்பரத்தில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் திருவீதி உலா நடைபெற்றது. திருவடிபூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு முன்னோட்டமாக இந்த 16 சக்கர சப்பரம் வீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

News July 31, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!