Virudunagar

News October 5, 2024

புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருநாளான புரட்டாசி பிரம்மோற்சவ விழா நேற்று (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

News October 4, 2024

அழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்

image

சாத்தூர் அடுத்த மேட்டமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ண சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நவராத்திரியை முன்னிட்டு இன்று (அக்.04) வித விதமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் நவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

News October 4, 2024

விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நாளை (அக்.5) மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.20க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

சிவகாசி அருகே மகனை கொலை செய்த தந்தை உயிரிழப்பு

image

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஓய்வு பெற்ற வேளாண் துறை ஊழியரான ராமசாமி(74), மது போதையில் தொடர் தொந்தரவு செய்து வந்த தனது மகன் சுப்ரமணியை அக்.1ம் தேதி கொலை செய்தார். இதை தொடர்ந்து கைதான ராமசாமி வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(அக்.04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 4, 2024

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்.22 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

ஆண்டாள் கோயிலில் சேனை முதல்வர் வீதி உலா

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்காக நேற்று சேனை முதல்வர் வீதி உலா நடைபெற்றது. 9 ஆம் தேதி ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10 ஆம் தேதி சயன சேவையும், 9 ஆம் நாளான 12 ஆம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.

News October 4, 2024

சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம் 

image

வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் சாப்டூர் வனச்சரகத்தில்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள் பாலிக்கும் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி விழாவில் மட்டும் சதுரகிரி மலையில் உள்ள கொழு மண்டபத்தில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் கொலு வீட்டிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு நவராத்திரி விழா தொடங்கியது.

News October 4, 2024

கொலு வீற்றிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொலு வீட்டிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News October 3, 2024

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

image

தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி ஓய்வுபெற்ற நிலையில் கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றிய ஜெயசிங் விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 3, 2024

காந்தி ஜெயந்தியில் 40 வழக்குகள் பதிவு

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையை ஒழிக்க வேண்டி மது விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்களின் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1737 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!