India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆறு, கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது, காதல் என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு. அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசியில் உள்ள அச்சகங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அடுத்த ஆண்டுக்கான தமிழ், தெலுங்கு காலண்டர்கள் வெளியிடப்படும். அந்த வகையில் நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் கடிகாரம் பொருத்திய காலண்டர், 234 சட்டமன்ற தொகுதி குறித்த விவரங்கள் அடங்கிய புதிய காலாண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு விலை 10% உயர்த்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருகே கல்லூரணியில் சாயல்குடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் சிக்கியது. இதில் காரில் பயணம் செய்த கீழ முடி மன்னார்கோட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன்(43) மற்றும் அவருடன் காரில் சென்ற மணி(18), ஆலடிபட்டியை சேர்ந்த சின்னத்துரை(22) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சதுரகிரி ஆடி அமாவாசை விழாவுக்கான பாதுகாப்பு பணியில் 1420 போலீசார் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஏடிஎஸ் பிக்கள், 11 டிஎஸ்பிக்கள், 25 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1420 போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்டு வரும் வெடி விபத்துக்களை தடுக்க தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்களுக்கு பயிற்சி வகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத 98 பட்டாசு ஆலைகளின் போர் மேன்களுக்கு தல ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராத தொகையை செலுத்தி பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று (02.08.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பாக திறன் வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் ஆக.9 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டங்களில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.08.2024 முதல் 16.08.2024 வரை நடைபெறுகிறது. இதில் தகுதியுடையோர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்து பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
Sorry, no posts matched your criteria.