India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024–25ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவிகள் தேவைப்பட்ட 7 மாணவ மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை மூலம் ரூபாய் 75 ஆயிரத்து 800 மதிப்பில் கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேற்று (ஆக.05) வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டங்களில் இன்று மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 விதம் மொத்தம் ரூ.54 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் ஒருநாள் தோட்டத்தில் குழந்தை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அக்குழந்தைக்கு கோதை என பெயர் வைத்து வளர்த்து வந்தார். கோதை சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது கொண்ட அளவற்ற அன்பால் பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலையை அவருக்குத் தெரியாமல் கோதை அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனாலேயே ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று(ஆக.4) 50,000 மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்றனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமான காரணத்தால் அங்கங்கே பக்தர்கள் நிறுத்தப்பட்டனர். 10,000 பக்தர்கள் அடிவாரத்தை நோக்கி இறங்கி வருவதால், கூட்டத்தை தவிர்ப்பதற்காக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 1 மணி வரை விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டி தேர்வுக்கு பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், வீடு கட்ட நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அர்வமுள்ளவர்கள் www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் – 1 மாணவர்களுக்கு முதல் அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் முதல் தாளில் 2034 மாணவர்களும், இரண்டாம் தாளில் 2028 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக சார்பில் நவீன சமையலகம் அமைக்க ரூபாய் 3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. விருப்பம் உடையோர் 10 நபர் குழுக்களாக அமைத்து விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.