Virudunagar

News August 7, 2024

அமைச்சர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

image

அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு KKSSR & தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவி., நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றம்

image

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று(ஆக.,7) நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் ஸ்ரீவி., சர்ச் சந்திப்பு வழியாகவும், ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே புதுப்பட்டி வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News August 7, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 6, 2024

அமைச்சர்கள் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

image

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நாளை காலை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தீர்ப்பு வரவுள்ளது. அரசியல் வட்டாரங்கள் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

News August 6, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜாதி டிசர்ட்க்கு தடை

image

தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீவியை சேர்ந்த சந்தனக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் திருவிழாவில் ஜாதியை வெளிப்படுத்தும் விதமாக டிசர்ட், ரிப்பன் உள்ளிட்டவை அணிந்து வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 6, 2024

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளார். இ-சலான் மூலம் ரூ.200 செலுத்தி பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 6, 2024

வினாடி வினா போட்டி – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. ஆக.18 அன்று விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

ஆண்டாள் கோவிலில் நாளை தேரோட்டம்

image

தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடைபெறும். இந்நிலையில் நாளை(ஆக.7) காலை.9.05 க்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தாண்டு தேரோட்டத்தின் போது தேரின் வேகத்தை குறைத்து ஆங்காங்கே நிறுத்தி செல்ல பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. தேரில் புதிதாக 7 வடங்கள் இணைக்கப்பட்டு அதில் பெண்களுக்கு ஒரு வடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 255 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு நன்கொடை வழங்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (ஆக.5) தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 255 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு நன்கொடை வழங்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (ஆக.05) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!