Virudunagar

News August 9, 2024

மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

image

ஏழாயிரம்பண்ணை அருகே சங்கர பாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் ஏராளமான செங்கால் நாரை பறவைகள் இங்கு வந்து இங்குள்ள மரங்களில் கூடுகட்டி தங்கி இனப்பெருக்கம் செய்தது. தற்போது பறவைகளின் குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் தங்களது வெளிநாடுகளுக்கு பறவைகள் செல்கின்றன.

News August 9, 2024

ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசின் மூலம் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 14ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஆக.08) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம்
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்விதேர்வு முகாம் ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 8, 2024

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மாற்றம்

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட காவல் காண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 7, 2024

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.13 அன்று தென்காசி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. எனவே செங்கோட்டை- மதுரை ரயில் தென்காசியிலிருந்து புறப்படும் எனவும், மதுரை-செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News August 7, 2024

உதவிக்கு பணம் அனுப்பிய விருதுநகர் மாணவர்கள்

image

வயநாட்டில் ஜீலை.30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாக மீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சேமித்த ரூ.13,300 கேரளா முதலமைச்சரின் நிவரண நிதியாக அளித்திருப்பது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. SHARE IT

News August 7, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 7, 2024

ஸ்ரீவி., தேரோட்டம்: நிலைக்கு வந்த ஆண்டாள் தேர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்புர தேர் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி ஆண்டாள், ரெங்கமன்னர் காட்சியளித்தனர். இதனையடுத்து தேரோட்டத் திருவிழா இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கி ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் 12:24 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

News August 7, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கண்டனம்

image

அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன் & தங்கம் தென்னரசு மீதான வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவி., சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறானது எனவும் ஸ்ரீவி., நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் கண்டனங்களை தெரிவித்துள்ளார். வரும் 11ம் தேதி அமைச்சர்கள் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!