Virudunagar

News August 11, 2024

சிவகாசியில் 19 வயது இளைஞர் திடீர் தற்கொலை

image

சிவகாசி பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மாதவன்(19). இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், மாதவனை பெற்றோர் வேலைக்கு செல்லும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாதவன், நேற்று(ஆக.,10) நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 10, 2024

மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் விருது அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வீட்டுமனை பட்டா வழங்குதல், மானியக் கடன், ஆவின் திட்டம் உள்ளிட்ட, மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி அக்கறை செலுத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆக.15 அன்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் விருதை வழங்குகிறார். SHARE IT

News August 10, 2024

BREAKING: விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழை

image

தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

வினாடி வினா போட்டிக்கு அழைப்பு

image

போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘சங்க இலக்கியமும் திருக்குறளும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/CN4ey1H6Lqsdyex18 என்ற இணையத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 9, 2024

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

image

இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனர். ஒரு வாரம் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அம்மன் வீதி உலா ஆக.16 நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News August 9, 2024

விருதுநகரில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

2024 – 2025 ஆம் கல்வியாண்டு நாள்காட்டியில் ஆகஸ்ட் மாதத்தின் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை பள்ளி வேளை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 பள்ளி வேளை நாட்களையும் பள்ளி கல்வித்துறை ரத்து செய்து அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

News August 9, 2024

93வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் இன்று ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 93வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

News August 9, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக.16 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். SHARE IT

News August 9, 2024

நாளை விருதுநகரில் இருந்து புறப்படுகிறது

image

மதுரை கோட்டத்தில் பகல் வேலைகளில் பொறியியல் பிரிவு சார்பில் தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்(16128) நாளை(ஆக.,10 ஆம் தேதி) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.

News August 9, 2024

மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

image

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும், கடந்த மார்ச் மாதம் வந்த ஏராளமான செங்கால் நாரை பறவைகள், மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்தன. தற்போது குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.

error: Content is protected !!