India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியில் இந்தியன் ஆயில் பெட்ரோலியம் சார்பில் இன்று (ஆக.13) நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி வருகை தர உள்ளார். சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுரேஷ் கோபி சிறப்புரையாற்ற உள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.12) நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்ட மூலம் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.12) சிவகாசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 94வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரையாடினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.12) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பார்வதி என்பவர் தனக்கு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யுமாறு மனு அளித்திருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்லூரி பயிலும் 2 மாணவிகளுக்கு மொத்தம் 6000 ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.12) புதிய காவல் கண்காணிப்பாளராக கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் எனவும் குற்றங்கள் குறைக்கப்படும் எனவும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கொட்டகாட்சியேந்தல் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில், ஆடி மாத உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டனர். தொடர்ந்து, நேற்று(ஆக.,11) காலை 6 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு சுடச்சுட கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்களுக்கு அனுமதி இல்லை.
சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், கனரக வாகனங்கள், பேருந்துகளுக்கான மாற்றுப்பாதை வழித்தடங்களில் முறையாக இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(ஆக.,11) மாலை MLA அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகாசி DSP கலந்து கொண்ட நிலையில், மாற்றுப் பாதையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான காவல்துறையினரை நியமிக்க MLA கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் ஆகஸ்ட் 13 அன்று காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ-க்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் இதில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்டம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசியில் தேசிய கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிறிய வடிவிலான பேஜ் முதல் மெகா சைஸ் வடிவிலான பல்வேறு காகிதம் மற்றும் அட்டைகளில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இங்கிருந்து தமிழக மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் நிலையில் இந்தாண்டு 5% விலை உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.