India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் ரூ.61.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஜூலையில் பூமிபூஜை போடப்பட்டது. மேம்பால பணிக்காக தேர்வு செய்யப்பட்ட மாற்றுப்பாதையில் ஏற்கனவே இரு நாட்கள் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மாற்றுப்பாதை சேதமடைந்தததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மாற்றுப்பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்ற பின் ரயில்வே கிராசிங்கை மூட சப் கலெக்டர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார்
வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அகழாய்வில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நேற்றும், கனமழையால் அகழாய்வு குழிகள் அனைத்தும் மூடப்பட்டது.
நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது . மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் மூவர்ண விளக்குகள் பொருத்தப்பட்டு மூவர்ண தேசியக்கொடி போர்த்தியது போல் மாநகராட்சி அலுவலகம் காட்சியளித்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது சுதந்திர தினத்தன்று வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியமைக்காக நல்லாளுமை விருதிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 2 விருதுகள் பெற உள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்.20 அன்று நடைபெற உள்ளது. எனவே ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்ட அமைப்புகள் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Sorry, no posts matched your criteria.