India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் காசுக்கடை பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் சந்தநாதன்(60). இவர் சமூக ட்ரஸ்டின் உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ட்ரஸ்டில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நபர்கள் முறைகேடு செய்து வருவதாக சமூகத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் ட்ரஸ்டில் உள்ள நிர்வாகிகள் சந்திரமோகன் உள்ளிட்ட 5 பேர் சந்தநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்சி மலையாடிவார பகுதியில் சுற்றித்திரியும்யானை கரும்பு கொம்பன் யானை.இது கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக செண்பகதோப்பு மலையாடி வார தோப்புகளில் புகுந்து மா, தென்னை, வாழை தோப்புகளை தேசப்படுத்தி வருகிறது. தற்போது குறவன் குட்டை பகுதியை கடந்து நகரை நோக்கி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் லாட்டரி தடுப்பு சம்பந்தமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வன்னியம்பட்டி பாலம் அருகே வெளிமாநில லாட்டரி எண்களை பேப்பரில் எழுதி விற்பனை செய்த வன்னியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாதமுத்து என்பவரை கைது செய்து அவரிடமிருந்த துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ட்ரான்ஸ் இந்தியா என்ற நிறுவனம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களிடம் ரூ.10,000 கட்டினால் மாதம் ரூ.5000 என ஆசை வார்த்தைக்கூறியுள்ளது. இதில் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக மக்கள் நிறுவன ஊழியர் செழியன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவர் தப்பிச் சென்றார். தற்போது அவர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 31 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் இன்று (அக்.27) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடம் கவரிங் நகைகள், குடைகள், பாய்கள், சிறிய ஜவுளி பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிலவுவதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் கட்டுப்படுத்தும் கருவி,பழைய திறன் குறைந்த மின்மோட்டார், பம்பு செட்டுக்கு பதிலாக புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள், உழவிற்கு பின்னேற்பு மானியம் ஆகியவை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகளின் புகார் அளிக்க எண் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு 9498194426 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என டி.எஸ்.பி ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
சிவகங்கை காளையார் கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் நினைவு தினம் (அக்.27) மற்றும் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா (அக்.30) ஆகிய நாட்களில் கொண்டாடப்பட உள்ளன. எனவே அன்று விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மதுபான கூடங்களில் மது விற்பனை செய்யக்கூடாது. உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு தொலைபேசி மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி மையத்தில் உள்ள பிட்டர் எலக்ட்ரீசியன், ஃபயர் டெக்னாலஜி பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை காண கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி மைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 40 – ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் அங்கு டெங்கு கொசு குழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டெங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளிக்கு ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.