India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவையொட்டி ஆக.1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் கோயில், மலைப் பாதையில் பக்தர்கள் விட்டுச் சென்ற நெகிழிக் கழிவுகளை சூழல் மேம்பாட்டுக் குழுவினர். களப் பணியாளர்கள், தாணிப்பாறை சூழல் மேம்பாட்டுக் குழுவினர் உள்ளிட்டோர் 2 டன் கழிவுகளை அகற்றினர்.
வெம்பக்கோட்டையில் பட்டாசு வியாபாரி குருவையாவிற்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் கார்த்திக் என்ற வெல்டிங் தொழிலாளி வெல்டிங் பணி செய்துள்ளார். அப்போது தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் வெல்டிங் தொழிலாளி கார்த்திக் மற்றும் மாட்டு தொழுவ உரிமையாளர் குருவையா படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (ஆக.18) இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், விருதுநகர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். * உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி, ராம்நாடு, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிருங்கள்*
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரதோஷ பூஜையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலில் குவிந்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,விருதுநகர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 449 ஆகும். இதன்படி, 1040 டிரைவர்கள் மற்றும் 960 நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டத்தில், 150 டிரைவர்கள், 200 நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனை, நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.