India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட மாணவி முதலிடம் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை நிர்வாகிகள் பாராட்டினர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஆக.25 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இரவு 10 மனிக்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் பிரபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் (PO) பணி காலியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 27ஆம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. விருதுநகர் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனி பகுதியில் இன்று வருவாய் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத பட்டாசு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகே அவர் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து தகர செட்டிற்கு சீல் வைத்தனர்.
அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அங்கன்வாடி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கோமதி குடற்புழு நீக்க மாத்திரைகள் குறித்தும் மாத்திரைகளை உட்கொள்ளும் முறைகள் குறித்தும், கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி வழிபாட்டிற்கு ஆக.17 முதல் ஆக.20 வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் இன்றி சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்(19.08.24), செவ்வாய்(20.08.24) ஆகிய தினங்கள் மட்டும் நடைபெறும் என ஒரு குறுஞ்செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து பொய்யான தகவல் என்றும், சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இன்று(ஆக.20) விளக்கம் அளித்துள்ளது.
தேனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவரும் சிவகாசி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று(ஆக.,19) பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், நத்தம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அர்ச்சுனா நதியின் ஆற்றுப் பாலத்திற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை கவனிக்காமல், கரையில் மோதி விழுந்ததில் இருவரும் பலியாகினர். இன்று காலை உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்குட்பட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக தோட்ட காவலாளி துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.