India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று (நவ.3) மாலை முதல் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கோவிலாங்குளத்தில் 2.9 செ.மீ மழையும், வெம்பக்கோட்டையில் 2.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 7.4 செ.மீ மழையும், சராசரியாக 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையான ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையில் 28 ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க கூட்டமைப்புகள் இணைந்து பல்வேறு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளது.

பட்டாசு, அச்சு தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் பட்டாசு உற்பத்தியை தொடர்ந்து தற்போது 2025ஆம் ஆண்டிற்கான காலெண்டர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 300 க்கும் மேற்பட்ட அச்சகங்களின் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் காலெண்டர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு புதிய வகையிலான காலெண்டர்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு விட இந்தாண்டு காலெண்டர் விலை உயர்ந்துள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் உள் தணிக்கைக்குழு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தியது. அதில் 2023-24 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதில் விருதுநகரில் ரூ.34.02 கோடி, ராஜஸ்தான் நகாவூரில் ரூ.1.09 கோடி, ம.பி மொரினாவில் ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் உள்ளே செல்வதற்கு இன்று வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி உள்ளே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவ மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலைகள் இருக்கும் இடத்திற்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம் என விருதுநகர் மாவட்ட பொதுமக்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரிப்பது, விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2021ஆம் ஆண்டில் 177 வழக்குகள், 2022 இல் 229 வழக்குகள், 2023 இல் 328 வழக்குகள், 2024ஆம் ஆண்டில் 31.10.2024 வரை 356 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்பி கண்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரைத் தவறாக பயன்படுத்தி முகநூலில் போலி கணக்குத் துவங்கி, மக்களுக்கு மெசேஜ் செய்து, சுமித்குமார் crpf அதிகாரி என்பவர் பணி மாறுதலாகி செல்கிறார். அவரது பொருள்களை பெற்றுச் செல்லுமாறும், அதற்கு ரூ.1,20,000 பணம் கட்ட வேண்டும் என காரியாபட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் தங்கி உள்ள 6 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் அல்லாத குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் பராமரிக்க இயலாத குழந்தைகளை பராமரித்து வளர்க்க பொருளாதார சூழல் இல்லாத வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பம் உடையோர் பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். (பகிரவும்

பாண்டிச்சேரியில் இருந்து முருக பக்தர்கள் 15 பேர் கந்த சஷ்டி திருவிழாவிற்காக சுற்றுலா வேனில் அருப்புக்கோட்டை வழியாக இன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதூர் விலக்கு பகுதியில் வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் லேசான காயமடைந்தனர். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.