Virudunagar

News August 25, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி – தேதி நீட்டிப்பு

image

2024ம் ஆண்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் மாநில அளவில் வரும் செப்., மற்றும் அக்.,மாதங்களில் நடைபெற உள்ளது.இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 12 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதில் முன்பதிவு செய்ய செப்.,2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. http://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

ஊஞ்சல் சேவையில் ஆண்டாள் ரங்கமன்னர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆவணி மாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News August 24, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஒரு அதிசயம்

image

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடு மண்ணால் ஆன காளையின் உருவம் கிடைத்ததன் மூலம் அந்த காலத்திலேயே வீர விளையாட்டுக்களில் முன்னோர்கள் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

மாவட்ட ஆட்சியரின் திடீர் வருகையால் அதிர்ந்த அதிகாரிகள்

image

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்படும் மணுக்கள், தீர்வுகள் நிலுவையில் உள்ள மனுக்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியரின் திடீர் வருகையால் அரசு அதிகாரிகள் திகைத்து நின்றனர்.

News August 24, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து சக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

News August 23, 2024

ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

image

விருதுநகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சுந்தரராஜன் என்பவர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்த மைதின் பாட்ஷா என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொலை குற்றவாளி சுந்தரராஜன் என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

News August 23, 2024

சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் ஒருவர் பலி

image

வெம்பக்கோட்டையை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் குருவராஜ் என்பவருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் கடந்த 18ம் தேதி வெல்டிங் பணி நடைபெற்றது. அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குருவராஜ் 42, மற்றும் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் 35, ஆகியோர் படுகாயமடைந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கார்த்திக் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News August 23, 2024

விருதுநகர் பஜாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

image

விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் காலத்தில் வயதானவர்கள் பஜாருக்கு வரும்போது மயக்கம் அடைந்தால் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட வாகனங்கள் பஜாருக்குள் வர முடியாத அளவிற்க்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது.

News August 22, 2024

சிவகாசி வழியாக மைசூருக்கு சிறப்பு ரயில்

image

சிவகாசி வழியாக பெங்களூரு, மைசூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 4 மற்றும் 7 ஆம் தேதி மைசூரில் இருந்து செங்கோட்டைக்கும் செப்டம்பர் 5 மற்றும் 8 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து மைசூருக்கும் இயக்கப்படும். இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்திற்கு 14.20(மதியம்) மற்றும் 21.33(இரவு) நேரத்தில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள கல்மணி கண்டுபிடிப்பு

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில், குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது. இச்செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தனது ‘x’ வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!