India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவில்லிபுத்தூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீசார் ராஜபாளையம் – தென்காசி சாலை, முறம்பு பகுதியில் போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் மது பாட்டில்களை கடத்தி வந்த குமார் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 349 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சரின் சாலை விரிவாக்க திட்டம் 2024 – 25 ன் படி அருப்புக்கோட்டை தாலுகா கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் வரையிலான 6 கி.மீ தூரம் சாலை ரூ 36.40 கோடி மதிப்பில் 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் இன்று 4 வழி சாலை அமைய உள்ள பகுதியில் மின்கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி அரசு பேருந்து பணிமனை அருகே வடக்கு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது வெள்ளைத்தாளில் நம்பர் எழுதி லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் சோழராஜபுரம் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்த போலீசார் அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆக.26) கோகுலாஷ்டமியை முன்னிட்டு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணன் சுவாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் வரும் 28, செப் 02 மற்றும் 06 ஆகிய தேதிகளில் சூலக்கரையில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது https:/forms.gle/JH6NeHJh8ETkv4qGA என்ற Google Form-ல் விண்ணப்பிக்கலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பதவியை சேர்ந்தவர் ஹரிராம், அவரது அம்மா மாரியம்மாள் ஆகிய இருவரும் அழகாபுரி -கிருஷ்ணன்கோவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மற்றொரு டூவிலரில் அதிவேகமாக வந்த குமார் என்பவர் டூவிலர் மோதியதில் அம்மா மற்றும் மகன் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து நத்தம்பட்டி போலீசார் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த முருகராஜ்(52) என்பவர் ஸ்ரீவி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஶ்ரீவி அருகே தட்டாங்குளப்பட்டியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் கேட்டு விற்பனையாளர் நாகராஜன்(50) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகராஜை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு வழிமுறைகள், கரைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்ட இடத்தில் மட்டுமே மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறையின்படி சிலைகளை கரைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண் : 06664) வரும் ஆகஸ்ட் 26, 27 மற்றும் செப்டம்பர் 8,9 ஆகிய தேதிகளில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு பதிலாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.