Virudunagar

News August 28, 2024

பாஜக தலைவரை கைது செய்யக்கோரி புகார்

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய நகர அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் காரியாபட்டி காவல் நிலையத்தில் இன்று (ஆக.28) புகார் அளித்தனர். தொடர்ந்து காவல் நிலையம் முன்பு அண்ணாமலையை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.

News August 28, 2024

விருதுநகரில் நாளை விளையாட்டு போட்டி

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேஜர் தயான்சந்த் பிறந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நாளை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

விருதுநகரில் தொழிலதிபர்க்கு அரிவாள் வெட்டு

image

விருதுநகர் என் ஜி ஓ காலனி நேரு தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெயராஜ்(51). இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் திடீரென ஜெயராஜை அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக கோல்வார்பட்டியைச் சேர்ந்த முத்துகுமார்(27) என்பவரை கைது செய்தனர்.

News August 28, 2024

89 வயதில் தடகள போட்டியில் வென்ற முதியவர்

image

சிவகாசியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 89). இவர் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகிறார். இவர் கடந்த வாரம் சுவீடன் நாட்டில் நடைபெற்ற உலக முதியோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 4 பிரிவுகளில் கலந்து கொண்டு வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சிவகாசி திரும்பிய அவரை அசோகன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

News August 28, 2024

பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான ஓராண்டு, இரண்டு தொழில் பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களுக்கு நேரடி சேர்க்கைக்கு ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சென்னையில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை அங்கு சந்தைப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

News August 27, 2024

எப்புடியேல்லாம் யோசிக்கிறாங்க…!

image

விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம், மற்றும் வ.உ.சி பிறந்த நாளன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி குறித்து மக்கள் அறியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர் பத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் உள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

News August 27, 2024

காலையில் செய்தி மாலையில் சீரமைப்பு

image

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் எதிரே மதுரை சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.‌ இது குறித்த செய்தி இன்று (ஆக.27) காலை நமது வே2நியூஸ் ஆப்பில் வெளியானது. இந்நிலையில் செய்தி எதிரொலியாக உடனடியாக போக்குவரத்து போலீசார் மாலை நேரத்தில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையில் மண்ணை கொட்டி கட்டிட பணியாளர்கள் மூலம் செம்மைப்படுத்தி சாலையை சீரமைத்தனர்.

News August 27, 2024

சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தகுதியான நபர்கள் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் நகர்ப்புற வாழ்வாதார மையம் ராஜபாளையம் நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 27, 2024

கந்தக பூமியில் பறவைகள் சரணாலயமா?

image

சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியில் அமைந்துள்ள செங்குளம் கண்மாய் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படுகிறது. இக்கண்மாயில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதால் கடந்தாண்டு இங்கு பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆட்சியர் ஆய்வு நடத்தினார். தூர்வாரும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் இங்கு சரணாலயம் அமைக்கப்படுமா? என சிவகாசி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!