Virudunagar

News August 30, 2024

விருதுநகரில் இன்று நாட்டு விதை கண்காட்சி

image

விருதுநகர் மாவட்டம் பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் சார்பாக இன்று (ஆக.30) விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் நாட்டு விதை கண்காட்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் காரியாபட்டி, பாம்பாட்டி மரபு விதை சேமிப்பு மைய நிறுவனர் சரவணகுமார், பூமி இயற்கை விவசாய மைய நிர்வாகி பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விவசாயிகள் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

News August 29, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 238 கடைகளுக்கு சீல்

image

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்தில் 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களில் 1094 கிலோ 851 கிராம் எடையுடைய புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

ராஜபாளையத்தில் தனியார் FM ரேடியோ

image

இந்தியா முழுவதும் 234 நகரங்களில் ரூ.784.87 கோடி மதிப்பில் உள்ளூர் பேச்சு மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார் ரேடியோ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ராஜபாளையம் உட்பட தமிழ்நாட்டில் 11 நகரங்களில் FM ரேடியோ அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

image

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக ஆக.31 முதல் செப்.3 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

News August 29, 2024

பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் மனு விசாரணை

image

விருதுநகர் ஆலடிப்பட்டியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 6 பஞ்சலோக சிலைகளை விற்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 2017ல் ஐஜி பொன்மாணிக்கவேல் கைது செய்தார்.சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு உதவ தன்னை பழிகடாவாக்கியதாக பொன் மாணிக்கவேல் மீது சென்னை ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் சிபிஐ அவர் மீது வழக்கு பதிந்தனர். முன்ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

News August 29, 2024

கேள்விக்குறியான பட்டாசு விற்பனை

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை வேகமெடுத்து வருகிறது. இந்த ஆண்டு கட்டப்பட்டுள்ள 200 புதிய பட்டாசு கடைகளுக்கான அனுமதி கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக வருவாய்த் துறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய்த் துறையினர் புதிய பட்டாசு கடைகளுக்கான அனுமதி வழங்காமல் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதால் 200 பட்டாசு கடைகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

News August 29, 2024

வெம்பக்கோட்டையில் கண்களை கவரும் கண்ணாடி மணிகள்

image

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு ஆகிய நிறங்களிலான கண்ணாடி மணிகள் கிடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கண்ணாடி மணிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இங்கு சங்கு வளையல் கூடம் இருந்ததற்கான சான்று கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 29, 2024

துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

image

சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் சௌந்தரராஜ். இவர் கடந்த 16 ம் தேதி எரிச்சநத்தம்-அழகாபுரி சாலையில் உள்ள தனது மினரல் வாட்டர் கம்பெனியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்த நபர்கள் இவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இச்சம்பவம் நடந்து 2 வாரங்களாகியும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

News August 29, 2024

விநாயகர் சிலை இங்கு தான் கரைக்க வேண்டும்

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் சிவகாசி நகர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை தெய்வானை நகரில் உள்ள பயன்படாத கிணற்றிலும், எம்.புதுப்பட்டி மற்றும் மாரனேரி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் மாரனேரி கண்மாயில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

செங்கோட்டை – திருப்பதி ரயில் இயக்கிட கோரிக்கை

image

சிவகாசியை சேர்ந்த ரயில்வே கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் JK பாலசுப்ரமணியனிடம் சிவகாசி வர்த்தக சங்கம் பிரதிநிதிகள் இன்று மனு அளித்தனர். மனுவில், செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நேரடி ரயில் இயக்கிடவும், இரவு 8 மணிக்கு மேல் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு இரவு நேர ரயில் இயக்கிடவும்,சிவகாசியில் 3வது நடைமேடை அமைக்கவும் ரயில்வே அமைச்சரை வலியுறுத்த வேண்டுகோள் விடுத்தனர்.

error: Content is protected !!