Virudunagar

News August 31, 2024

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்கமன்னர்

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

News August 31, 2024

ரூ.2 கூடுதலாக வசூலித்ததால் ரூ.25,000 இழப்பீடு

image

மதுரை-காரியாபட்டி வழித்தட தனியார் பேருந்தில் காரியாபட்டியை சேர்ந்த வழக்கறிஞர் மரகதவள்ளியிடம் ரூ.28 கட்டணத்திற்கு பதில் ரூ.30 வசூலிக்கபட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2 மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.25002 வழங்க தனியார் பேருந்து நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 31, 2024

விருதுநகரில் தேர்தல் குறித்த அடிப்படை ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முடிவுற்ற லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக மக்களின் அறிவு, அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. எனவே அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 31, 2024

விருதுநகரில் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டி

image

விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் விளையாட்டு துறை சார்பில் மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த மேஜை பந்து போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

News August 31, 2024

விருதுநகர் அருகே காதல் ஜோடியை கொல்ல முயற்சி

image

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பழனிச்சாமி உயர் சாதியை சேர்ந்த கிருஷ்ணவேணியை காதலித்து கடந்த மாதம் பெண்ணின் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் வீட்டார் இருவரையும் காரில் கடத்திச்சென்று கொலை செய்ய முயற்சித்தனர். இதையறிந்த போலீசார் திரைப்பட பாணியில் விரட்டி சென்று இளம் தம்பதியை மீட்டு பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

News August 31, 2024

சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதி

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் வனத்துறை அனுமதித்துள்ளது.இன்று முதல் செப்.3, வரை சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்லலாம். ஆவணி மாத பிரதோஷம், அமாவாசையை ஒட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி வனத்துறை வழங்கியுள்ளது. இதை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்த மகாலிங்கரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

News August 31, 2024

விருதுநகரில் வந்தே பாரத் நின்று செல்ல கோரிக்கை

image

இன்று முதல் சென்னையிலிருந்து காலை 5 மணிக்கு வந்தே பாரத் புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில் வழியாக சென்று திரும்பும் ஆனால் இந்த ரயிலுக்கு விருதுநகரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.விருதுநகர், சிவகாசி மக்கள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 31, 2024

விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிலை அமைப்பினர், நிர்வாகிகள் ஊர்வலம் அமைதியான முறை நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 30, 2024

திருச்சுழியில் 172 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அத்தகவலின் பேரில் திருச்சுழி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 172 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அதில்11 பேரை கைது செய்துள்ளனர்.

News August 30, 2024

ஆலை உரிமையாளர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

image

விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் மாரியப்பன், அருள்தாஸ், பிரபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஆலை உரிமையாளர்களான ராமர்(60), முத்துராமன்(58) ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

error: Content is protected !!