Virudunagar

News November 20, 2024

விடுமுறை: பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்!

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று(நவ.20) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

வரதட்சணை கொடுமை செய்த 8 பேர் மீது வழக்கு

image

சிவகாசி டி. மானகசேரியை சேர்ந்தவர் மாரிராஜ் சர்க்கரைத்தாய் தம்பதி. திருமணத்தின் போது 30 பவுன் நகை வரதட்சணையாக சர்க்கரைதாய் வீட்டினர் வழங்கிய நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் மாரிராஜ், அவரது பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்டோர் கொடுமை செய்துள்ளனர். மனஉளைச்சலடைந்த சர்க்கரைத்தாய் சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கணவர் மாரிராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News November 19, 2024

12 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் 12 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பெற்றுள்ளது. குறிப்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் வசந்தி, ஆமத்தூர் பகுதிக்கும், அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிந்த சொர்ணலட்சுமி அருப்புக்கோட்டை வருவாய் ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News November 19, 2024

மருத்துவமனைகள் பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் இணைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கால் இழப்புகளை தடுக்க ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

30 இடங்களில் கண் பரிசோதனை முகாம்

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், விஷன் ஸ்பிரிங் இணைந்து நாளை (நவ.20) இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் வசிக்கும் 30 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 19, 2024

தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

image

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. பை பாஸ் சாலையில் நடந்த முகாமிற்கு, விருதுநகர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார். சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

News November 19, 2024

ராஜபாளையத்தில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 19, 2024

ஸ்ரீவியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் புகையிலை தடுப்பு சம்பந்தமாக எஸ்.ஐ. ஜோதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த முனீஸ்வரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 16 பவுச்சிகளை பறிமுதல் செய்தனர்.

News November 18, 2024

சாத்தூர் அருகே பட்டாசு வெடித்த சிறுவன் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம், மார்க்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த இளையராஜா மகன் பாண்டித்துரை(12). இவர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் மீதமிருந்தவற்றை கடந்த நவ.9-ஆம் தேதி மாலை வீட்டுக்கு பின்புறம் வெடித்த போது, பலத்த காயமடைந்தார். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று(நவ.17) உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News November 18, 2024

பிளைக்கல் பெரியாறு அணை இன்று திறப்பு

image

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து பெரியாறு அணை 38 அடியும், கோவிலாறு அணை 30 அடியும் தண்ணீர் உள்ளதால், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள விவசாய பாசனத்திற்காக இன்று இரு அணைகளிலும்  தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.

error: Content is protected !!