India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று(நவ.22) மதியம் 1 மணிக்குள் இரண்டு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே மாரனேரியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன்(26). இவர் தனது தாய் மாரியம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஒத்தப்புலி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சங்கரேஸ்வரன், அவரது தாய் மற்றும் விபத்து ஏற்படுத்திய சரண்குமார் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டு வருகிறது.இதில் 13 – 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டெ.12 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மிதமான மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையினால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 ஐ மீறி திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரும் புகார்களுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நுரையீரல் சிகிச்சை பிரிவிற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாசக் குழாய் அகநோக்கி இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சப் டிவிஷன் டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் பொன்னரசு திருச்சுழி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 23ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நடைபெறும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிவகாசியில் 10 மில்லி மீட்டர் மழையும், கோவிலாங்குளம் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும், அருப்புக்கோட்டை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும், சாத்தூரில் 8 மில்லி மீட்டர் மழையும், திருச்சுழியில் 9.50 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

விருதுநகர் உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.