India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசின் நாளைய (25.11.2024) நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி அளவில் கெப்பிலிங்கம்பட்டி சமுதாய கூடம், டி.கடமங்குளம் பயணிகள் நிழற்குடை, கீழ்உப்பிலிக்குண்டு கலையரங்கத்தை திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டான பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சிறப்பு பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் இன்று பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில் மொத்தம் 1481 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலை தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையை தரம் உயர்த்தி, மின் விளக்குகள் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதற்கான மனு சிவகாசி பன்னீர் தெப்பத்தில் நாளை 24-11-2024 (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களின் கையொப்பத்திற்காக வைக்கப்படுகிறது. நாளை கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனுவில் கையெழுத்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசின் நாளைய நிகழ்ச்சி நிரல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் துவங்கும் நிகழ்ச்சியில் கல்லூரணி அங்கன்வாடி மையம் திறப்பு, குச்சனேரிப்பட்டியில் பயணிகள் நிழற்குடை திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது உறவினரான ரிஷிகேசவனும் ஸ்ரீவில்லிபுத்தூர் – ராஜபாளையம் சாலை, தனியார் வெகேஷனல் சென்டர் அருகே இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி,சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு கம்பியில் மோதினர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரிஷிகேசவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசியிலிருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம்(நவ.21) இரவு ஆம்னி பேருந்து ஒன்று 6 பயணிகளுடன் சென்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியதில் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.

ஸ்ரீவி அருகே தைலாகுளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர் நிலம் வாங்குவதற்காக ஶ்ரீவி கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்பு கணக்கில் இருந்து கடந்த 6ம் தேதி ரூ.7.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் முன்பு நிறுத்தியிருந்த பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் திருடி சென்றனர். இவ்வழக்கில் இன்று(நவ.23) ஆந்திராவை சேர்ந்த நாகராஜ், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.