India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக சாரல் மழை மற்றும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியான சூழலில் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பட்டாசு ஆலைகளும் தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நாளை கார்த்திகை மாத பிரதோஷம் & நவ.30 அமாவாசை வழிபாடும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை(நவ.28) முதல் டிச.01 வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சதுரகிரியில் சாரல் மழை பெய்வதால் சுவாமி தரிசனம் செய்ய அந்தந்த நாட்களின் காலையில் பெய்யும் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த மனுதாரருக்கு பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் ரூபாய் 6000 மதிப்புள்ள தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட சுள்ளங்குடியில் தற்காலிக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள நாடக மேடையில் தற்காலிக ரேஷன் கடை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை தினங்களை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படும் எனவும் நீரோடைகளில் குளிக்க தடை எனவும் தெரிவித்துள்ளது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025 குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஸ் சாப்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் கடந்த இரு தினங்களாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்று திருச்சுழி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமில் மொத்தம் 2,183 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக திருச்சுழி சட்டமன்றத் தொகுதி A.R.O அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபுராணி. இவர் குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா முருகன் குடும்பத்திற்கும் முன்பகை இருந்துள்ளது. இதை மனதில் வைத்து, வீட்டில் இருந்தபோது பிரபுராணி, அரவிந்த் உள்பட மூன்று பேரை, சூர்யா, முருகன் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கூமாபட்டி போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.