India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முக்கிய பஜார் வீதிகளில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் உலாவர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களது தங்க நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
பிரதமரை துணிச்சலுடன் எதிர்த்து தமிழக உரிமைக்காக குரல் கொடுப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏழாயிரம்பண்ணையில் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு தொழில் நடத்துபவர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 3-ஆம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பிரபாகரன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சிறிய அளவிலான இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 25,000 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த <
சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி மலையேறிச் சென்று சதுரகிரி சதுரகிரியில் வழிபாடு நடத்த நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறை நுழைவு வாயிலில் காலை 6 முதல் 10 மணி வரை தினசரி அனுமதிக்கப்படுவர். மாலை 4 மணிக்குள் அடிவாரம் திரும்பி வரவேண்டும்.பக்தர்களை அனுமதிப்பது குறித்து முன் அறிவிப்பு இல்லாததால் முதல் நாளான நேற்று ஒரு சில பக்தர்களை வந்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நேற்று (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெறும். இரண்டாம் நாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நாச்சியார்பட்டிக்கு புறப்பட்டனர். ஏப்ரல் 11 ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.