Virudunagar

News October 30, 2024

விருதுநகரில் மோசடி செய்த மேனேஜர் கைது

image

விருதுநகர் அருகே சூலக்கரை சிட்கோவில் உள்ள தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் சிவராஜா என்பவர் 2019 ஜூலை முதல் 2024 ஜூலை வரை வேலை செய்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் போலி கையெழுத்திட்டு ரூ.3.82 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மண்டல மேலாளர் ஆண்டனி ஸ்டீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவராஜாவை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

News October 30, 2024

மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,77,364 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 70 ஆயிரத்து 642. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 6 ஆயிரத்து 473 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 245 பேர் ஆகும். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டார்.

News October 30, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள், முதியோர், மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் உள்ளிட்ட இல்லங்களில் அனைவரும் முறையான சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

விருதுநகர் ஆட்சியர் பெயரில் போலி முகநூல்!

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி அதில் உள்ள நண்பர்கள் பட்டியலுக்கு தான் ஆட்சியர் ஜெயசீலன் என அறிமுகமாகி, ராணுவத்தில் பணியாற்றும் தனது நண்பரிடம் வீட்டு உபயோக பொருட்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தி முகநூலில் உரையாடி நூதன மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இதேபோல் மோசடியில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது

News October 29, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியில் செல்பர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*SHARE பண்ணுங்க*

News October 29, 2024

பட்டாசு தொழிற்சாலை ஊழியர்களுக்கு கறிவிருந்து 

image

பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. மல்லி அருகே உள்ள என்.எஸ்.வி பட்டாசு ஆலையில் இன்று(அக்.29) என் எஸ் வி குடும்ப விழா இன்று கொண்டாடப்பட்டது. அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இன்று(அக்.29) தங்க நாணயம், அரிசி, சிப்பம் மற்றும் கறி விருந்து வழங்கல் நடைபெற்றது.

News October 29, 2024

இன்றுடன் பட்டாசு உற்பத்தி நிறுத்தம்

image

நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகை காண பட்டாசு உற்பத்தி பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுகின்றன. கடந்த ஓராண்டாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டு பின்னர் தீபாவளி முடிந்து ஓரிரு வாரங்களில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி மீண்டும் துவங்கும்.

News October 29, 2024

சதுரகிரி செல்ல இன்று முதல் 5 நாட்கள் அனுமதி

image

ஸ்ரீவி.மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

விருதுநகரில் நகைக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

image

விருதுநகர் காசுக்கடை பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் சந்தநாதன்(60). இவர் சமூக ட்ரஸ்டின் உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ட்ரஸ்டில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நபர்கள் முறைகேடு செய்து வருவதாக சமூகத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் ட்ரஸ்டில் உள்ள நிர்வாகிகள் சந்திரமோகன் உள்ளிட்ட 5 பேர் சந்தநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News October 28, 2024

விருதுநகர்:கரும்பு கொம்பன் நகரை நோக்கி வருவதால் மக்கள் அச்சம்

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்சி மலையாடிவார பகுதியில் சுற்றித்திரியும்யானை கரும்பு கொம்பன் யானை.இது கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக செண்பகதோப்பு மலையாடி வார தோப்புகளில் புகுந்து மா, தென்னை, வாழை தோப்புகளை தேசப்படுத்தி வருகிறது. தற்போது குறவன் குட்டை பகுதியை கடந்து நகரை நோக்கி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.