India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிகப்படியான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றமைக்காக விருதுகள் பெற்ற மருத்துவ அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப.,பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிப்பதற்காக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (மார்ச்.25) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி மாநகர் பகுதிகளில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும், சில கொலைகள் பழிக்கு பழியாக நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக மேலும் கொலைகள் நடைபெறாமல் தடுக்க சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கும் பணியில் தனிப்பிரிவு மற்றும் உளவுத்துறை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதுரை ஈச்சனேரி பகுதியில் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்ற காவலர் மார்ச்18-ல் எரித்து கொல்லப்பட்டார். இதில் வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூவேந்தரை இன்று அதிகாலை கைது செய்ய முயன்ற போது ஆய்வாளர் மாரி கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூவேந்தர் பணத்திற்காக கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.25 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் சூலக்கரை சென்று தான் செல்ல வேண்டும். SHARE IT
கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த மன்னர்களின் அஸ்தி மேல் கட்டப்படும் கோவில்கள் பள்ளிப்படை எனப்படுகிறது.இது போல நிறைய கோவில்கள் சோழ நாட்டில் உள்ள நிலையில்,பாண்டிய நாட்டின் ஒரே பள்ளிப்படை கோவிலாக திருச்சுழி அருகே பள்ளிமடம் சிவன்கோவில் உள்ளது.மன்னர் சுந்தர பாண்டியன் இறந்த பிறகு தம்பி வீரபாண்டியன் இந்த கோவிலை கட்டி “திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோவில்” என பெயர் சூட்டியுள்ளார்.ஷேர் பண்ணுங்க
விருதுநகர்,குமராலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக 1052 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.2000 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் பெண்களே அதிகம் பணிபுரிவர் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்காக 10,000 பேர் தங்கும் வகையில் தங்குமிடம் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
சிவகாசி அருகே கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்னுச்சாமி (48). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையாகி சம்பளப் பணத்தை மனைவிக்கு கொடுக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராமலட்சுமி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலடைந்த பொன்னுச்சாமி நேற்று அருகில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.