India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை நேற்று முகூர்த்த நாளாக இருப்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்தது. மேலும் அலுவலர்களுக்கு மாற்று விடுமுறை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 16 பத்திரப்பதிவு அலுவலகங்களில் கீழராஜகுலராமன் பத்திரப்பதிவு அலுவலகம் மட்டுமே திறந்த நிலையில் பத்திரப்பதிவு எதுவும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் குடும்ப வன்முறைகள் 179, வரதட்சணை கொடுமைகள் 11, பாலியல் துன்புறுத்தல்கள் 10, குழந்தை திருமணங்கள் 150, திருமணத்தை தாண்டி உறவால் தகராறு 68, கட்டாய திருமணம் 31 என்ற வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் 181 இல் புகார் அளிக்கலாம் என மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி தெரிவித்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு சிவகாசியில் ஈஷா நடத்தும் “மஹாசிவராத்திரி ஈசனுடன் ஓர் இரவு” நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்வு சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சிவகாசி முஸ்லீம் வர்த்தக சங்க மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு ,கோட்டையூரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தம்பிபட்டி -மாவூத்து சாலையில் கயிறு தொழிற்சாலையில் கூடை பின்னும் வேலை செய்து வந்துள்ளார். நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக, அதிக உற்பத்தி கொடுக்க சொன்னதன் பேரில் கூடை பின்னி கொண்டிருந்தபோது காளீஸ்வரி கண்ணில் கயிறு பட்டதால் கண்பார்வை இழந்துள்ளார்.வத்திராயிருப்பு போலீசார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சிவகாசி, சாத்தூர் பகுதிகளுக்கு தாயில்பட்டி வழியாக இரவு நேரங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என WAY2NEWS செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக சிவகாசியிலிருந்து இரவு 9.20-க்கு இயக்கப்படும் பேருந்து நேற்று முதல் 10 மணிக்கு தாயில்பட்டிக்கு வழியாக சாத்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவி அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தை மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.20 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்காமல் தாமதப்படுத்துவது ஏன்? என பாமக கேள்வி எழுப்பியுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க சுவரொட்டி ஒட்டி வலியுறுத்தியுள்ளனர்.

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற முதல்வரின் அறிவிப்பின் படி அரசாணை வெளியிட வேண்டும் என தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்க தலைவர் தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ரூ.20 லட்சம், பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா மார்ச்.16 அன்று தொடங்கி ஏப்.4 வரை நடைபெற உள்ளது. அதில் மார்ச்.16 அன்று பொங்கல் சாட்டுதல், மார்ச்.10 கொடியேற்றம், ஏப்.6 பங்குனிப் பொங்கல், ஏப்.7 கயிறுகுத்து, அக்னிசட்டி, ஏப்.8 தேரோட்டம், ஏப்.9 தேர்தடம் பார்த்தல், ஏப்.10 மஞ்சள் நீரோட்டம், ஏப்.13 திருவிழா நிறைவு பெறுகிறது.

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் பயிற்சி மற்றும் பணி அமர்வு மையத்தின் சார்பில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் 255 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேர்காணல் முடிவில் 85 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.