India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரைத் தவறாக பயன்படுத்தி முகநூலில் போலி கணக்குத் துவங்கி, மக்களுக்கு மெசேஜ் செய்து, சுமித்குமார் crpf அதிகாரி என்பவர் பணி மாறுதலாகி செல்கிறார். அவரது பொருள்களை பெற்றுச் செல்லுமாறும், அதற்கு ரூ.1,20,000 பணம் கட்ட வேண்டும் என காரியாபட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் தங்கி உள்ள 6 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் அல்லாத குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் பராமரிக்க இயலாத குழந்தைகளை பராமரித்து வளர்க்க பொருளாதார சூழல் இல்லாத வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பம் உடையோர் பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். (பகிரவும்
பாண்டிச்சேரியில் இருந்து முருக பக்தர்கள் 15 பேர் கந்த சஷ்டி திருவிழாவிற்காக சுற்றுலா வேனில் அருப்புக்கோட்டை வழியாக இன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதூர் விலக்கு பகுதியில் வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் லேசான காயமடைந்தனர். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர்,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இடி,மின்னலுடன் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நாளை விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் சற்றுமுன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 9 பேர் மறுகரையில் சிக்கித் தவித்தனர். தண்ணீர் அதிகமாக செல்வதால் சிக்கிக் கொண்டவர்களை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராஜபாளையம் தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் 48 வார்டுகளிலும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் மூலம் வெளியான குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 100 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.
சிவகாசி புதுத்தெருவில் வசிப்பவர்கள் காளிராஜன் ( 55). இவர் தனது மருமகன் வசந்தகுமாருடன் பைக்கில் பட்டாசு வாங்கிக்கொண்டு புதுத்தெரு நோக்கி சென்றனர். அப்போது அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறிந்த பட்டாசின் தீப்பொறி பட்டு தீ விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காளிராஜன் 90% தீக்காயத்துடனும், வசந்த்குமார் 10% தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், வனச்சரக எல்கைக்கு உட்பட்ட பகுதியில் அறிவிக்கப்பட்ட மலையேற்றத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நாளை (நவ.3) முதல் நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டம் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் www.trektamilnadu.com என்ற தளத்தில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில் தனியார் விவசாய தோப்பிற்குள் கட்டிப்போட்டு வைத்திருந்த கன்று குட்டி ஒன்றை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. இந்நிலையில் நேற்று வனத்துறையினர் பசு கடித்த இடத்தில் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.