India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் புகையிலை தடுப்பு சம்பந்தமாக எஸ்.ஐ. ஜோதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த முனீஸ்வரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 16 பவுச்சிகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், மார்க்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த இளையராஜா மகன் பாண்டித்துரை(12). இவர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் மீதமிருந்தவற்றை கடந்த நவ.9-ஆம் தேதி மாலை வீட்டுக்கு பின்புறம் வெடித்த போது, பலத்த காயமடைந்தார். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று(நவ.17) உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து பெரியாறு அணை 38 அடியும், கோவிலாறு அணை 30 அடியும் தண்ணீர் உள்ளதால், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள விவசாய பாசனத்திற்காக இன்று இரு அணைகளிலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.
சிவகாசி மாநகராட்சி பகுதியில் பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அவற்றை அழகுபடுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பொது சுவர்களில் உரிய அனுமதியின்றி விளம்பரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் ஜவுளி தொழிலின் சந்தை மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030 இல் 350 பில்லியன் டாலராக உயரும். ஜவுளித்துறை உற்பத்தியை அதிகரிக்க விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 278 வாக்குச்சாவடி மையங்களில் இன்று இரண்டாவது நாளாக வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வாக்குச்சாவடிகளில் திமுக மாநகரச் செயலாளர் உதயசூரியன், நேரில் பார்வையிட்டு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தார்.
தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் லிசோன்(21). இவரும், இவரது நண்பர் ஆகாஷ்(21) என்பவரும் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில் சட்டம் படித்து வருகின்றனர். இருவரும் நேற்று(நவ.16) டூவீலரில் கிருஷ்ணன்கோவில் – வத்திராயிருப்பு செல்லும் வழியில் சேசபுரம் அருகே செல்லும் போது பைக் மரத்தில் மோதியதில் லிசோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15 ஆவது மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் மகாலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் செந்தில் குமரன் நாடார் கல்லூரி வளாகத்தில் மியாவாக்கி காடு உருவாக்கும் பணியை என்.எஸ்.எஸ், எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி, விருதுநகர் வனக்கோட்டம், சாத்தூர் வனச்சரகத்துடன் இணைந்து கல்லூரி செயலாளர் மகேஷ் பாபு துவக்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் சாரதி, திட்ட அதிகாரி அர்ஜுன்குமார் மற்றும் மாணவர்கள் பலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
Sorry, no posts matched your criteria.