India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலம் தெற்கு ஒன்றியம், ஆலகிராமத்தில் உள்ள நெடுந்தெருவைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் நாராயணன் ஆகியோரின் வீடு மற்றும் கொட்டகை மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதில், அவர்களது 9 ஆடுகள் தீக்கு இரையாயின. இதனை அறிந்த விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் சேகர், நேரில் சென்று பார்வையிட்டு நிதி உதவி அளித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள சாலைகளில், கால்நடைகளை திரிய விடக்கூடாது. அப்படி திரியவிட்டால், பொது சுகாதார சட்டத்தின்படி கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாவிட்டால் கால்நடைகளை பிடித்த நாளிலிருந்து 3ஆவது நாளில் பொது ஏலம் விடப்படும். எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது மாடுகளை பராமரித்துக் கொள்ள வேண்டும் என விழுப்புரம் நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க
முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திண்டிவனத்தில் நாளை (நவ.23) வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திண்டிவனத்தில் உள்ள ஜே.வி.எஸ். திருமண மண்டபத்தில் நடக்கிறது. அவைத் தலைவர் மஸ்தான் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார். மேலும்,சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்டி. பார்ம்சி சான்று பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.mudhalvarmarndhagam.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுவரை, ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
கலை பண்பாட்டு துறை சார்பில், இசைக்கருவிகள் மற்றும் கலை உபகரணங்கள் வழங்கும் விழா, விழுப்புரம் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வரும் சனிக்கிழமை (நவ.23) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈச்வரன் பட்டதிரி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு கலை உபகரணங்களை வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
ராஜாம்புலியூர் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றியுள்ள அனைத்து பொதுமக்களின் வாகனங்களுக்கும் இலவச அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வணிகர் சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படாத காரணத்தால், நாளை (நவ.23) முழு கடை அடைப்பு மற்றும் டோல்கேட் முற்றுகைப் போராட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்தூா்பேட்டை அருகே இரு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு கோவையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி பாதூா் பகுதி அருகே வந்தபோது, நாமக்கல் நோக்கிச் சென்ற மற்றோரு லாரி பின்பக்கத்தில் மோதியது. இதில், நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநர் வெங்கடேசுவரன் (26) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சக்தி இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில், இன்று மாலை, டிட்டோஜாக் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தஞ்சை மாவட்ட அரசு பள்ளியில் பணிபுரிந்த தற்காலிக தமிழ் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கடலோர பகுதிகளான பிள்ளைச்சாவடி, சோதனைகுப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்னமுதலியாா்சாவடி, ஆரோவில், பொம்மையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக இந்த ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகையானது நடத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.