Villupuram

News November 23, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (23.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News November 23, 2024

விழுப்புரம் நிர்வாகிகளுக்கு மோதிரம் பரிசளித்த விஜய்

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த உறுதுணையாக இருந்த விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு பனையபுரத்தில் கட்சித் தலைவர் விஜய் இன்று விருந்து அளித்தார். அப்போது மாநாடு நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட தொண்டர் பரணி பாலாஜி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஸ்வநாதனுக்கு தங்க மோதிரத்தை விஜய் வழங்கினார்.

News November 23, 2024

ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்படும்

image

விழுப்புரத்தில் நவ.29ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் சமூகநீதி போராளிகள் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

விழுப்புரத்தில் 56,871 மாணாக்கர்கள் பயன் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1,206 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 56,871 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார். 1- 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

News November 23, 2024

மாற்றுத்திறனாளி நல அலுவலர் பணியிடை நீக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் தேக்கநிலையில் வைத்தும், அலுவலக இறையாண்மைக்கு பாதகம் ஏற்படும் வகையிலும், துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக விழுப்புரம் மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருதங்கவேல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

News November 23, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் குற்றம் சாட்டிய விவசாயிகள்

image

விழுப்புரத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் இருவேல்பட்டு வாய்க்காலை தூர் வார வேண்டும், பட்டா மாற்றம் நில அளவைப் பணிகளை செய்து கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர், விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்குவதில்லை, கூட்டுறவு வங்கிகள் கடன் தருவதில்லை என குற்றம்சாட்டினர்.

News November 23, 2024

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 23, 2024

விழுப்புரம் விவசாயிகளுக்கு விருந்து வைக்கும் விஜய்

image

விக்கிரவாண்டியில் கடந்த மாதம் தவெக மாநில மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று கட்சித் தலைவர் விஜய் விருந்து வைக்க உள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

5 கோடி 70 லட்ச ரூபாய் செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம்

image

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயர்ந்த 21 போராளிகளுக்கு விழுப்புரம் ஜானகிபுரம் அருகில் 5 கோடி 70 லட்ச ரூபாய் செலவில் 8000 சதுர அடி பரப்பளவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இவற்றை திறந்து வைக்கிறார். மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நேற்று (22.11.2024) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!