India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் வல்லம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துரைக்கண்ணு மற்றும் மனைவி பச்சையம்மாள், கோபிகா (மகள்) என மூன்று பேரும் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 2025-ஆம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் மார்ச் 23, 24 தேதிகளில் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்தை கொண்டு வந்து இலவச பஸ் பயண சலுகை அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். விழுப்புரத்தைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <
விழுப்புரம், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் பலி. துக்க நிகழ்விற்காக சென்னையில் இருந்து வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் துரைகண்ணு(50), பச்சையம்மாள்(45), கோபிகா (17) ஆகியோர் சம்பவ இடத்துலேயே பலி ஆகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் – சென்னை சாலையில் கோனேரிக்குப்பத்தின் வழியாக, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், அவ்வழியாக வந்த கம்பெனி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கம்பெனி ஊழியர்கள் 11 பேர் காயமடைந்தனர். ஆம்னி பஸ் டிரைவர் அனிஷ் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவில், தொன்மையான வரலாறும், பெருமையும் கொண்டதாக விளங்குகிறது. ராகு- கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும், கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் கோயில் திகழ்கிறது. ஆலயத்தின் வடமேற்கே அமைந்துள்ள இயற்கையான புற்றில், இதற்கான பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கள்ளிகுளத்தை சேர்ந்த மாணவன் சாது சுந்தர், 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வகுப்பில் சக மாணவனை தாக்கியதாக, உடற்கல்வி ஆசிரியர் செங்கனி சுந்தரை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. மாணவனுக்கு கண்பார்வை போய்விட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் செங்கனியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வானுார்அடுத்த பூத்துறையில் அரசு செம்மண் குவாரியில், விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. வழக்கு விசாரணைக்கு, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.