India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அரசியலமைப்பு தினமான இன்று (நவ.26), விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும் மருத்துவருமான சேகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இயற்றப்பட்ட தினமான இன்று, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூகநீதி இலட்சியங்களை மனதில் கொண்டு உருவான இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க ஒன்றிணைவோம்” என பதிவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளாதால், மறு அறிவிப்பு வரும் வரை விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நித்தியபிரியதர்ஷினி தெரிவித்தார். வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் உள்ளதால் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
செஞ்சி அடுத்த அனந்தபுரம் தச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் நிலத்தகராறு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு தனது சகோதரர் ஏழுமலை மற்றும் அவரது மைத்துனர் முருகன் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் நேற்று முத்துக்கிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செஞ்சி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த செந்தில்குமார், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டர். இதையடுத்து, விழுப்பும் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த கார்த்திகா பிரியா புதிய டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று (நவ.25) செஞ்சி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.,க்கு செஞ்சி உட்கோட்டத்தைச் சேர்ந்த போலீசார் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பரமேசுவரி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 508 மனுக்களை பெற்றாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதிகளில், நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு, சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகினார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிச.5ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலர் பூபாலன் தலைமையிலான 50 நிர்வாகிகள், அந்தக் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் நேற்று (நவ.26) அதிமுகவில் இணைந்தனர். இதில், நாம் தமிழர் கட்சியின் விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர் பாரூக், ஒன்றிய துணை தலைவர் ஜான்கென்னடி, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வசந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.26) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, செஞ்சி, விக்கிரவாண்டி, செந்தூர், கூட்டேரிப்பட்டு, திருப்பாச்சனூர், சத்தியமங்கலம், நாட்டார்மங்கலம், கொத்தமங்கலம், பாதிரிபுலியூர், முண்டியம்பாக்கம், வி.சாலை, ரெட்டிக்குப்பம், ஆசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.