India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்தி பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் பா.ரஞ்சித் இருவரையும் கண்டித்து இன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் வேலு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தனபால், ஒன்றிய பொதுச்செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
சம்பா நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 30ஆம் தேதி கடைசி நாள் என்று விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் 2024-25ம் ஆண்டு சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், விழுப்புரத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால், மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
விழுப்புரம், தெளி கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தணிகைவேல் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (நவ.26) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும், குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதம் மற்றும் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்தார்.
கனமழை காரணமாக விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் 14.5 மில்லி மீட்டர், வானூர் 19.5 மில்லி மீட்டர், விக்கிரவாண்டி 9.4 மில்லி மீட்டர், திண்டிவனம் 14 மில்லி மீட்டர், செஞ்சி 4.9 மில்லி மீட்டர், கண்டாச்சிபுரம் 4.6 மில்லி மீட்டர், மேல்மலையனூர் 8 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 4.6 மில்லி மீட்டர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்(75), நேற்று (நவ 25) விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் பழனியை சந்தித்து, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10,000 தொகையை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். முதியவர் ஒருவர், தொடர்ந்து யாசகம் எடுத்து, பொதுநல நிதிக்கு வழங்கி வரும் செயலை, அலுவலர்கள், பொது மக்கள் பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அன்றைய தினம் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.