India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (30.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மரக்காணம் அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. பலத்த சுரைக்காற்றுடன் மாலை 5.30 மணிக்கே கரையை கடக்க தொடங்கி உள்ளது. இது முழுவதும் கரையை கடக்க இன்னும் 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் கன மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணியிலிருந்து இன்று காலை 8:30 மணி வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டர்). திண்டிவனம் – 6.4 மி.மீ, மரக்காணம் – 6 மி.மீ, விழுப்புரம் – 5 மி.மீ, நேமூர் – 4.2 மி.மீ, சூரப்பட்டு – 4 மி.மீ, கோலியனூர் – 4 மி.மீ, கெடார் – 4 மி.மீ, செஞ்சி – 3 மி.மீ, வானூர் – 2 மி.மீ, அரசூர் – 1 மி.மீ என மழைப்பொழிவு பதிவாகியுள்ளது .
ஃபெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- கரைல்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் தற்போது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய ஆட்சியர் பழனி, பேரிடர் காலங்களில் இயற்கை இடர்பாடுகள் தொடா்பான புகாா்களை 1077 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் எனவும், 04146-223265 என்ற தொலைபேசி எண், 7200151144 என்ற வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றில் தொடர்பு தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சம்பா பருவத்தில் நெல்-2 ரகம் நடவு செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், பின்னா் நவம்பா் 30-ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. எனவே காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமானதுக்கு முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம், மரக்காணம், வானூர், அரகண்டநல்லூர், மையம், அரசூர், காணை, செஞ்சி, கண்டமங்கலம், மேல்மலையனுர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடைய கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.