India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அவ்வழியே செல்லும் நெல்லை – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மதுரை – சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி – சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை – மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம், விக்கிரவாண்டி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார். இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் மழை பாதிப்பு பகுதி ஆய்வு செய்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மக்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுமக்கள் அவசர உதவிகளுக்கு காவல் உட்கோட்ட அலுவலக எண்களான விழுப்புரம் 9498100486, திண்டிவனம் 9498100496, செஞ்சி 9498100505, கோட்டகுப்பம் 9498100527, விக்கிரவாண்டி 04146-227100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9498181229 மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரத்தில் மரக்காணம் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரத்தில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், விழுப்புரம், திண்டிவனத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. விழுப்புரம், திண்டிவனம், மரக்காணத்தில் 60 செ.மீ. மழை பெய்துள்ளது. விழுப்புரம், மரக்காணம், கடலூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்துள்ளதால் பாதிப்புகளை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் செல்ல உள்ளார். விழுப்புரத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளோம் என கூறினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் மாமால்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று கரையை முழுமையாக கடந்த நிலையில், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது
விழுப்புரம் நகரில் 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து கனமழை வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது. ஃபென்ஜால் புயல் நேற்று கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 30 மணி நேரத்தை கடந்தும் விழுப்புரம் நகரில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மயிலம் பகுதியில் 50 செ.மீ., அதீத கனமழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர, மரக்காணத்தில் 24 செ.மீ. மழையும், அரகண்டநல்லூர், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. உங்க பகுதியில் மழை பெய்ததா?
Sorry, no posts matched your criteria.