India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (டிசம்பர் 04) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை வெளுத்துவாங்கிய நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பாத நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் நிலைகுலைந்து போயுள்ளது. புயலின் கோரத்தாண்டவத்தால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பாதிப்பை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த டிசம்பர்.10ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த காலாவசாகம் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தகவல் அறிந்த அமைச்சர் பொன்முடி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், அமைச்சர் மீது சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் உதவியுடன் அமைச்சர் அங்கிருந்து வெளியேறினார்.
ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வட தமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.3) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் தண்ணீர் கேன்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கேன்கள் நெடுஞ்சாலைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தால் அனைவரும் சாலையில் வந்த தண்ணீர் கேன்களை வாங்கிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (02.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (டிசம்பர் 03) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை வெளுத்துவாங்கிய நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இயல்பு நிலை திரும்பாத நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பாதிப்பால் சென்னை- விழுப்புரம் இடையே ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம்- திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேயான ரயில்வே மேம்பாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மரக்காணம், கோட்டகுப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் பழனி, அமைச்சர் பொன்முடி, திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் வரவேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணியிலிருந்து இன்று காலை 8:30 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. கெடார் – 419 மி.மீ., சூரப்பட்டு – 383 மி.மீ., விழுப்புரம் – 348 மி.மீ., முகையூர் 302 மி.மீ, நேமூர் – 295 மி.மீ., கோலியனூர் – 320 மி.மீ., அரசூர் – 75 மி.மீ.,செஞ்சி – 41.3 மி.மீ., திண்டிவனம் – 13 மி.மீ.,வானூர் – 10 மி.மீ.,மரக்காணம் – 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.