India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி எந்த பதிலும் அளிக்காததால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகவே கருதப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அன்புமணி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பானது வழங்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எட்டு மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அன்புமணி “உரிமை மீட்க… தலைமுறை காக்க'” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக, ராமதாஸ் “கிராமங்களை நோக்கி” என்ற பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் நேற்று தொடங்கினார். இதனால் கட்சிக்குள் பிளவு மேலும் வலுப்பெறுவதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை செய்த பாலாஜி, அருண்பிரகாஷ், ராஜேஷ், சேட்டு உள்ளிட்ட ரவுடிகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி, ஸ்ரீ ரங்கபூபதி இன்ஜினியரிங் கல்லூரியில் வரும் செப்.13 சனிக்கிழமை காலை நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை கொண்டு வரவும்.

வானுார் வட்டம் கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே, திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடை எதிரே டிரான்ஸ்பார்மர் ஒன்று, உயர் மின்னழுத்தம் காரணமாக நேற்று(செப்.10) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், நாகராஜன் மீது கொதிக்கும் ஆயில் தெறித்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த <

பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கட்சியில் அதிகாரப் போட்டி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான சர்ச்சைகளால் தீவிரமடைந்தது. இந்நிலையில், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பாமகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்து, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. இந்த அறிவிப்பு பாமகவினர் இடையே பெரும் அதிவரலையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வேளாண்மைத் துறையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் கிடைப்பதாக உதவி வேளாண்மை இயக்குநர் ஆர். செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதில் அசோஸ்பைரில்லம் (நெல், இதர பயிர்கள்), பாஸ்போ பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் ரைசோபியம் ஆகியவை அடங்கும். தேவைப்படும் விவசாயிகள் செஞ்சி வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுகி இந்த உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.