India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ், மனைவி பெரோஸ், தம்பி மகிமைடேவிட், தந்தை அந்தோணிசாமி ஆகிய 4 பேரும் நேற்று ஆட்டோவில் விழுப்புரம் சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரேக் போட்டதால் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தராஜிடம் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக சுமார் 3500 பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தியானது, தொடர்ந்து அக்டோபர் மாதம் வரையில் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தொடர்மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நவம்பர் 8 முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 11, 13 ஆகிய தேதிகளில், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவிதா, அலமேலு மற்றும் சங்கர் ஆகிய விவசாய கூலித் தொழிலாளர்கள் மூவரும் வியாழக்கிழமை ஒலக்கூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு சாலையில் திரிந்து கொண்டிருந்த வெறிநாய் திடீரென அவர்களை துரத்திச் சென்று கடித்ததில் மூவரும் காயமடைந்தனர்.இதேபோல பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்களையும் நாய் கடித்தது.
விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக்கடன் முகாம் வருகிற 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் செஞ்சி ஆலம்பூண்டியில் உள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்கும் முகாம் தொடர்பாக மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் 5,000க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பாமகவினர் 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி பாமக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று விழுப்புரத்தில் அனுமதியின்றி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக, மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி உள்ளிட்ட 150 பேர் மீது, விழுப்புரம் போலீசார் வழக்கு பதிது செய்தனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு உரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, இன்று காலை விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் ஏற்றிச்சென்ற உரம் முட்டைகள் சாலையில் சிதறியது. இந்த விபத்தில், உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. திருவெண்ணைநல்லூர், சித்தலிங்க மடம், புதுப்பாளையம், மெய்யூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.